Activity

AnbumaniRamadoss.in
22nd of November 2017 02:20 AM
புட் சட்னியின் "பதில் கேள்வி" நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் சார்பாக நான் கேட்ட சில கேள்விகளின் இரண்டாம் பாக காணொளி
Participated in @put_chutney show "Padhil Kaelvi" (Part-2)

https://youtu.be/mqcQWAXUbZk #TNyouth #Lead #Change #Progress #PMK
AnbumaniRamadoss.in
21st of November 2017 01:01 AM
புட் சட்னியின் "பதில் கேள்வி" நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் சார்பாக நான் கேட்ட சில கேள்விகளின் முதலாம் பாக காணொளி
Participated in @put_chutney show "Padhil Kaelvi"

https://youtu.be/rca4AJ-Vrdc #TNdengueCrisis #LiquorProhibition #TheChennaiWeWant #TNWaterManagement #TNITRaid
AnbumaniRamadoss.in
18th of November 2017 08:53 PM
தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் ஐந்து இலட்சத்தில் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுடுநீர் நிலையத்தை இன்று திறந்துவைத்த போது ....
Message image
AnbumaniRamadoss.in
18th of November 2017 08:35 PM
இன்று சேலம் மாவட்டம் மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்று பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்த போது....
Message image
AnbumaniRamadoss.in
18th of November 2017 08:11 PM
சேலம் மேற்கு தொகுதி முத்துநாய்கன்பட்டி ஊராட்சியில் சரபங்கா நதியின் குறுக்கே 120 லட்சம் செலவில் கட்டப்பட்டதாக போலியாக கணக்கு காட்டப்பட்ட, ஊழல் தடுப்பணையை இன்று பார்வையிட்ட போது....
Message image
AnbumaniRamadoss.in
18th of November 2017 01:52 PM
சேலம் மேட்டூர் வட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் தோணிமடுவு பாசன அணைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என 50 ஆண்டுகாலமாக மக்கள் கோரி வருகின்றனர். இது மிகவும் முக்கியமான வாழ்வாதாரத் திட்டம் ஆகும்.

திட்ட ஆய்வுகள் முடிந்து திட்ட மதிப்பீடும் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும், மேட்டூர் உபரிநீர் திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியரை இன்று சந்தித்த போது ....

இத்திட்டத்தால் இலக்கம்பட்டி, கருங்கல்லூர், காவிரிபுரம், ஆலமரத்துப்பட்டி, சித்திரப்பட்டிபுதூர், கண்ணாமூச்சி, மூலக்காடு, சாம்பள்ளி ஆகிய ஊராட்சிகளின் கிராமங்களும் ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை ஒன்றிய பகுதிகளும், குருவரெட்டியூர், ஜர்தல், கொமராயனூர் போன்ற பகுதிகளும் பயனடையும்.
Message image
AnbumaniRamadoss.in
17th of November 2017 11:05 PM
இன்று (17/11/2017) தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து

1)கருங்கல்லூர் ஊராட்சி,
மேட்டுபழையூரிலும்

2)நவப்பட்டி ஊராட்சி,
நவப்பட்டியிலும்

3)ஓலைப்பாட்டி ஊர்ட்சி,
காமனேரியிலும்
கட்டப்பட்ட நியாயவிலைக் கடைகளை
திறந்து வைத்து பொதுமக்களை
சந்தித்தேன்.

4)கோனூர் ஊராட்சி,
மோட்டூரில் நூலகத்தையும் திறந்து
வைத்து பொதுமக்களை சந்தித்தேன்.

5)சந்தைதானம்பட்டி ஊராட்சி மன்ற
அலுவலகத்தில் பொதுமக்களை
சந்திதேன்.
#Dharmapuri #MyContituency #MPLADS #PDSshops #RationShops #Library #Lead #Change #Progress #PMK
Message image
AnbumaniRamadoss.in
16th of November 2017 11:55 AM
ஈரோடு லெஸ்நாதன் மற்றும் மாஸ்டர் மைண்ட் செஸ் அகாடமி இணைந்து நடத்தும் டெக்ஸ்வேலி சர்வதேச தரவரிசை சதுரங்க போட்டியை துவக்கி வைத்து இளம் சதுரங்க வீரர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தேன்.
Happy to inaugurate #Texvalley 1st International Open #FIDE rating #Chess tournament at #Erode
Message image
AnbumaniRamadoss.in
14th of November 2017 12:13 PM
On this #Childrensday let us all promise to respect and protect the children of our country. Everyone of us should responsibly, strive hard to ensure a healthy, safe, peaceful, prosperous & dignified future for all our children.
Message image
AnbumaniRamadoss.in
12th of November 2017 07:07 PM
தமிழ்நாடு இறகுப்பந்து கழகத்திற்கு தலைவராக இரண்டாவது முறையாக என்னை தேர்ந்தெடுத்தமைக்கு மிக்கமகிழ்ச்சி. என் மீது நம்பிக்கை வைத்து இப்பொறுப்பை அளித்த அனைத்து மாவட்ட இறகுப்பந்து சங்கங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். வருங்காலங்களில் தமிழகத்தில் இறகுப்பந்தாட்டம் மென்மேலும் வளர்ச்சி பெற கடுமையாக உழைப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

Am happy to be re-elected as President of Tamil Nadu Badminton Association. My sincere thanks to all the TN District Badminton Associations for reposing faith in me. Will be striving hard for the betterment of #Badminton in #TN in the coming years.
Message image
AnbumaniRamadoss.in
11th of November 2017 07:22 PM
சொத்துக்கள் அடமானம்: போக்குவரத்துக்
கழகங்களை மூட தயாராகிறதா அரசு?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பொருளாதார நிலை குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன. அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் 3 கோட்டங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் ரூ.2494 கோடிக்கு நிதி நிறுவனங்களிடம் அடகு வைக்கப்பட்டிருக்கின்றன. மற்ற கோட்டங்களின் நிதிநிலையும் மிகவும் மோசமாகவே உள்ளது.

அரசுப் போக்குவரத்துக்கழகத்தின் கோவை கோட்டம் தான் மிக மோசமான நிலைமையில் உள்ளது. இந்த கோட்டத்திற்கு சொந்தமான பேருந்துகள், பணிமனைகள், நிலங்கள் ஆகியவை ஒட்டுமொத்தமாக ரூ.1549.60 கோடிக்கு அடகு வைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சொத்துக்கள் ரூ.580.63 கோடிக்கும், மதுரைக் கோட்டத்தின் சொத்துக்கள் ரூ.363 கோடிக்கும் அடகு வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மீதமுள்ள 5 அரசுப் போக்குவரத்துக்கழகக் கோட்டங்களின் பேருந்துகள், பணிமனைகள், நிலங்கள், தளவாடங்கள் ஆகியவையும் அடகு வைக்கப்பட்டுள்ளன. எனினும், அவற்றின் விவரங்களை தகவல் உரிமைச் சட்டப்படி வழங்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதித்து வருகின்றனர்.

அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் அடகு வைக்கப்பட்டுள்ள சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.11,000 கோடிக்கும் கூடுதலாக இருக்கும் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்டு வருங்கால வைப்பு நிதி, காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு செலுத்தப்படாமல் இருக்கும் தொகை, 6 ஆண்டுகளில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியப் பயன்கள் ஆகியவற்றின் மதிப்பு ரூ.6400 கோடி என்று கூறப்படுகிறது. இவை தவிர வேறு வழிகளில் பெறப்பட்டுள்ள கடன்களையும் சேர்த்தால் போக்குவரத்துக் கழகங்களின் மொத்த கடன் சுமையை ரூ.20,000 கோடியைத் தாண்டும்.

தமிழ்நாட்டில் தனியார் பேருந்துகள் அரசுடைமையாக்கப்பட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடந்த 1972-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டன. அடுத்த இரு ஆண்டுகளில் அவற்றின் சொத்துக்களை அடகு வைக்கும் அவலம் தொடங்கி விட்டது. தொடக்கத்தில் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குதல் உள்ளிட்ட செலவுக்காக பேருந்துகளை அடகு வைப்பதும், அடுத்த சில மாதங்களில் அவை மீட்கப் படுவதும் வாடிக்கையாக இருந்து வந்தது. ஆனால், கடந்த 2006&ஆம் ஆண்டுக்கு பிறகு தான் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செலவுகளுக்காக அவற்றின் பணிமனைகள் அமைந்துள்ள நிலங்கள் உள்ளிட்ட சொத்துக்களை அடகு வைக்கும் வழக்கம் ஏற்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் அடமானம் செய்யப்பட்ட சொத்துக்கள் பெரும்பாலான நேரங்களில் மீட்கப்பட்டதே இல்லை. மாறாக அடகு வைக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு அதிகரித்துவிட்டதாகக் கணக்குக் காட்டி, கூடுதல் கடன் பெறுவது தான் வழக்கமாகி வருகிறது. போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகம் அந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சீரழிவுக்கு அவற்றில் நடக்கும் ஊழலும், நிர்வாகச் சீர்கேடுகளும் தான் காரணம் ஆகும். பேருந்துகள், உதிரிபாகங்களை கொள்முதல் செய்வதில் நடக்கும் ஊழல்கள், ஆளுங்கட்சி தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலை செய்யாமல் ஊதியம் வழங்குவது, அதிக வசூல் கிடைக்கும் வழித்தடங்களில் தனியார் பேருந்துககளுக்கு சாதகமாக அரசுப் பேருந்துகள் இயக்கத்தை நிறுத்துவது அல்லது தாமதப்படுத்துவது போன்றவை தான் போக்குவரத்துக் கழகங்களின் சீரழிவுக்கு காரணம் ஆகும். இதுதவிர, போக்குவரத்துக்கழகங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பல்வேறு மானியங்களை தமிழக அரசு வழங்காததால் இழப்பும், சீரழிவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

போக்குவரத்துக் கழகங்களின் கடன்சுமை குறைந்தபட்சம் ரூ.20,000 கோடியைத் தாண்டி விட்ட நிலையில், அதற்கான வட்டி சுமையே ஆண்டுக்கு ரூ.2000 கோடிக்கும் அதிகமாக இருக்கும். மேலும் போக்குவரத்துக் கழகங்களின் கடன் சுமை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்குமே தவிர குறையாது. இதேநிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் போக்குவரத்துக்கழகங்களின் கடன்கள் அடைக்க முடியாத அளவுக்கு அதிகரித்து விடும். அத்தகைய சூழலில் அரசுப் போக்குவரத்துக்கழக சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்து, கழகங்களை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை உருவாகிவிடும். அப்படி ஒரு நிலை ஏற்படுவதைத் தான் தமிழகத்தின் திராவிட ஆட்சியாளர்கள் விரும்புவதாகத் தெரிகிறது.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பொதுப்போக்குவரத்து என்பதே ஏழைகளுக்கு எட்டாத ஒன்றாகிவிடும். தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் வைத்தது தான் சட்டம் என்றாகிவிடும். அதைத் தடுக்கும் வகையில் மின்வாரியக் கடன்சுமையை குறைக்க உதய் திட்டத்தை செயல்படுத்தியது போன்று, அரசுப் போக்குவத்துக் கழகங்களின் கடன் சுமையையும் அரசே ஏற்கும் வகையில் புதியத் திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு வழங்க வேண்டிய அனைத்து நிலுவைகளையும் வழங்க வேண்டும். அத்துடன் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகத்தை சீரமைத்து, அனைத்து போக்குவரத்துக் கழகங்களையும் லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#Lead #Change #Progress #PMK #TNSRTC #DebtRidden #Mismanagement
Message image
AnbumaniRamadoss.in
10th of November 2017 11:25 PM
I, Welcome the Delhi Government CM
Mr Arvind Kejriwal's decision to introduce Free PublicTransport(Buses) to lower the alarming pollution level. Happy to see that #PMK party's #ChennaiManifesto "The Chennai We Want" - Towards a new Urban agenda for Chennai Metropolitan area is being implemented in our Capital New Delhi.

புது டெல்லி அரசின் முதலமைச்சர்
திரு. அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு நிலவும் சுற்றுச்சூழல் மாசுபாட்டினை கருத்தில் கொண்டு இலவசமாக அரசு பேருந்துகளை இயக்கி காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த முடிவெடுத்திருப்பதை வரவேற்று மகிழ்கிறேன். இது பாட்டாளி மக்கள் கட்சியின் கடந்த 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியான "நாம் விரும்பும் சென்னை" - "சென்னை பெருநகரத்திர்கான புதிய நகர்புற செயல் திட்டத்தை நோக்கி" என்ற அறிக்கையில் இடம்பெற்ற "இலவச அரசு பேருந்து சேவை" என்ற திட்டம் என்பது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.

(2016 காணொளிப்பதிவு)

https://youtu.be/tS-Z6TWw9gs #TheChennaiWeWant #AnbuManifesto #AirQuality #DelhiChokes #FreePublicTransport #Lead #Change #Progress #PMK
AnbumaniRamadoss.in
9th of November 2017 12:53 PM
நக்கீரன் இதழுக்கு அளித்த பேட்டியின் காணொளி.
#Lead #Change #Progress #PMK #TNfuture #Decent #Development #GoodGovernance #AlternativePolitics
AnbumaniRamadoss.in
5th of November 2017 05:54 PM
கடன் கட்டாத உழவரை குண்டர்களை

அனுப்பி வங்கிகள் கொலை செய்வதா?

வேளாண் பயன்பாட்டுக்காக டிராக்டர் வாங்குவதற்காக பெற்ற கடனை திரும்பச் செலுத்தாத விவசாயி மீது பொதுத்துறை வங்கி அனுப்பிய குண்டர்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், உயிரிழந்த உழவரின் குடும்பத்திற்கு இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் போந்தை கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்ற விவசாயி சாத்தனூரில் உள்ள தனியார் வங்கியில் கடன் பெற்று டிராக்டர் வாங்கியுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக தவறாமல் கடன் தவணை செலுத்தி வந்த அவரால் வறட்சி பாதிப்பு காரணமாக இரு ஆண்டுகளாக தவணை செலுத்த முடியவில்லை. இதனால் ஞானசேகரன் வாங்கிய கடனை வாராக்கடன் பட்டியலில் சேர்த்த வங்கி நிர்வாகம், அதை வசூலிக்கும் பொறுப்பை தனியார் வசூல் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. அந்த நிறுவனத்தின் சார்பில் நேற்று மாலை ஞானசேகரனை சந்தித்த 4 குண்டர்கள், வங்கிக் கடனை வசூலிக்கும் பொறுப்பு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும், கடன் தொகைக்காக டிராக்டரை ஜப்தி செய்யப்போவதாக கூறியுள்ளனர். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஞானசேகரன் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டதால் தான் கடனை செலுத்த முடியவில்லை என்றும், அறுவடை முடிந்ததும் இரு மாதங்களில் வங்கிக் கடனை செலுத்தி விடுவதாகவும் அவர்களிடம் கூறியுள்ளார்.

ஆனால், அதை ஏற்காத குண்டர்கள் டிராக்டரை ஜப்தி செய்து கொண்டு செல்ல முயன்றுள்ளனர். அதைத் தடுக்க முயன்ற ஞானசேகரனை அவர்கள் வேகமாக பிடித்து தள்ளியதால் அவர் கீழே விழுந்து அடிபட்டுள்ளார். அதில் சுயநினைவிழந்த ஞானசேகரன் முதலில் உள்ளூர் மருத்துவமனையிலும், பின்னர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி நேற்றிரவு ஞானசேகரன் உயிரிழந்தார். உழவர்களுக்கு வழங்கிய கடன்களை வசூலிப்பதில் பொதுத்துறை வங்கிகள் எந்த அளவுக்கு அரக்கத்தனமாக நடக்கின்றன என்பதற்கு இது எடுத்துக்காட்டாகும். இத்தகைய அத்துமீறல்களை மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது.

வேளாண்மைக்காகவும், கல்வி கற்பதற்காகவும் வாங்கிய கடனை செலுத்த முடியாத மாணவர்களையும், உழவர்களையும் வங்கி நிர்வாகங்கள் குண்டர்களை அனுப்பி மிரட்டுவது வாடிக்கையாகி விட்டது. வங்கி நிர்வாகங்கள் மற்றும் குண்டர்களின் மிரட்டல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 10-ஆம் தேதி அரியலூர் மாவட்டம் ஒரத்தூரைச் சேர்ந்த அழகர் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த பாலன் என்ற விவசாயி கடன் தவணையை செலுத்தாததற்காக அவரை வங்கி அதிகாரிகளும், காவல்துறையினரும் கடுமையாக தாக்கி, டிராக்டரை பறித்துச் செல்லும் காட்சிகள் வாட்ஸ்&-அப்பில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதேபோல், கல்விக் கடனை செலுத்தாததற்காக குண்டர்கள் மிரட்டியதால் மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த மாணவர் லெனின் தற்கொலை செய்து கொண்டார். வங்கிகளின் இத்தகைய அத்துமீறல் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

வாகனக்கடன்களை எவ்வாறு வசூலிக்க வேண்டும் என்பதற்கான விதிகளை ரிசர்வ் வங்கி தெளிவாக வகுத்துள்ளது. 01.07.2011 அன்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட விதிகளில்,‘‘கடனை வசூலிக்கும் நடைமுறையில் கடன் வசூலிக்கும் முகவர்களின் நாகரிகமற்ற, சட்டவிரோத, வினா எழுப்பத்தக்க அணுகுமுறையை தவிர்க்க வேண்டும். சட்டப்பூர்வ வழிமுறைகளை மட்டுமே கடைபிடிக்க வேண்டும்’’ என்று தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. அதேபோல்,‘‘வாகனக் கடன்களை வசூலிக்கும் உரிமை வங்கிக்கு உண்டு. ஆனால், வாகனங்களை பறிமுதல் செய்வதற்காக வங்கிகள் குண்டர்களை அனுப்பக்கூடாது. குண்டர்கள் கமிஷனுக்கு செயல்படுபவர்கள் என்பதால் அவர்கள் மிரட்டல், பலப்பிரயோகம் போன்ற செயல்களில் ஈடுபடுவர். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்’’ என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்வளவுக்குப் பிறகும் வங்கிகள் குண்டர்களை அனுப்பி கொலை செய்வதை அனுமதிக்கக் கூடாது.

வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடனை செலுத்தாமல் ஏமாற்ற வேண்டும் என்பது ஞானசேகரனின் உள்ளிட்ட உழவர்களின் நோக்கம் அல்ல. வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டதால் அவரிடம் பணம் இல்லை. சாகுபடி செய்யப்பட்டு வரும் நெல்லை அறுவடை செய்த பின்னர் கடனை செலுத்துவதாக அவர் கெஞ்சியுள்ளார். அதை ஏற்காமல் அவரை குண்டர்கள் கீழே தள்ளி அவரது சாவுக்கு காரணமாக இருந்துள்ளனர். இதற்காக அவர்கள் மீதும், அவர்களை ஏவிய வங்கி நிர்வாகத்தின் மீதும் காவல்துறை கொலை வழக்குப் பதிவு செய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தர வேண்டும்.

மல்லையா போன்ற தொழிலதிபர்களுக்கும், பெரு நிறுவனங்களுக்கும் பல்லாயிரக்கணக்கான கோடி கடன் கொடுத்து திருப்பி வசூலிக்க முடியாத வங்கி நிர்வாகங்கள், அதை ஈடுசெய்வதற்காக சாதாரண வாடிக்கையாளர்கள் மீது புதுப்புது கட்டணங்களை விதித்து கொள்ளையடிக்கின்றன. ஏழை உழவர்கள் கடனை செலுத்தாவிட்டால் மிரட்டியும், தாக்கியும் உயிரைப் பறிக்கின்றன. இதற்கு முடிவு கட்டப்பட வேண்டும். குண்டர்கள் தாக்கியதில் உயிரிழந்த விவசாயி ஞானசேகரனுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க தமிழக ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும்.
#PSUBanks #TNfarmersLoan #SaveTNFarmers #BankGoons #RBI2011Guidelines #TNFarmerAttacked #PSUBankKills #Lead #Change #Progress #PMk
Message image
AnbumaniRamadoss.in
2nd of November 2017 11:24 AM
நீட் தேர்வில் தமிழகத்திற்கு அநீதி: அதிக
தேர்வு மையங்களை அமைக்க வேண்டும்!

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்விக்கான கட்டமைப்புகளை பிற மாநிலத்தவருக்கு தாரை வார்க்கும் நோக்குடன் மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழத்திற்கு மேலும் ஓர் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தமிழகத்தில் மிகக்குறைந்த அளவிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

எம்.டி., எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகள், முதுநிலை மருத்துவப் பட்டயப்படிப்புகள் ஆகியவற்றின் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் ஜனவரி 7-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதற்காக ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த 31-ஆம் தேதி முதல் நவம்பர் 27-ஆம் தேதி வரை பெறப்படுகின்றன. இதற்கான தேர்வு மையங்களை அமைப்பதில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்காக நாடு முழுவதும் 129 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி ஆகிய 6 நகரங்களில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மையங்கள் தமிழகத்திற்கு போதுமானவையல்ல.

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு 31.10.2017 மாலை 3.00 மணி முதல் விண்ணப்பங்கள் பெறப்படும் நிலையில், அடுத்த 12 மணி நேரத்தில் தமிழகத்திலுள்ள 6 தேர்வு மையங்களும் நிரம்பி விட்டதால் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் வேறு மாநிலங்களுக்கு சென்று தேர்வெழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. வழக்கமாக தேசிய அளவில் நடத்தப்படும் போட்டித் தேர்வாக இருந்தாலும், நுழைவுத்தேர்வாக இருந்தாலும் விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அந்தந்த மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால், ஒவ்வொரு நகரிலும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் நீட் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தேர்வுக்காக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, முதலில் விண்ணப்பிப்போருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. தமிழகத்தில் 6 நகரங்களில் அமைக்கப் பட்டுள்ள தேர்வு மையங்களில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இடங்கள் இருப்பதால் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து இடங்களும் நிரம்பி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை 1.20 லட்சம் பேர் எழுதினர். அவர்களில் சுமார் 10,000 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த ஆண்டு அவர்களை விட அதிகம் பேர் நீட் தேர்வில் பங்கேற்கக்கூடும். அதற்கேற்ற வகையில் கூடுதலாக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இத்தேர்வை நடத்தும் தேசிய தேர்வு வாரியம் அதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. தேசிய அளவில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மொத்தம் 23,686 முதுநிலை மருத்துவ இடங்கள் உள்ளன. இவற்றில் 2441 தமிழ்நாட்டில் உள்ளன. முதுநிலை மருத்துவ இடங்களிலும், நீட் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கையிலும் 10% தமிழகத்தின் பங்கு என்பதால், தேர்வு மையங்களிலும் 10% தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது தமிழகத்தில் 13 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டிருக்க வேண்டும். மாறாக அதில் பாதிக்கும் குறைவான நகரங்களில் மட்டும் தேர்வு மையங்கள் அமைக்கப்படுவது போதுமானதல்ல.

கடந்த ஆண்டு நாடு முழுவதும் 41 நகரங்களில் மட்டும் தான் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் சென்னை, கோவை, திருச்சி ஆகிய 3 நகரங்கள் தமிழகத்தில் அமைந்திருந்தன. ஆந்திரத்தில் விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய இரு நகரங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. இம்முறை தேர்வு நகரங்களின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் தேர்வு நகரங்களின் எண்ணிக்கை இரு மடங்காக மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஆந்திரத்தில் இது ஆறு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இத்தனைக்கும் ஆந்திர அரசு சிறப்பு சட்டம் இயற்றி முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் அனைத்தையும் தானே எடுத்துக் கொள்கிறது. தமிழகமோ 50% இடங்களை மத்திய ஒதுக்கீட்டுக்கு வழங்குகிறது. அவ்வாறு இருக்கும் போது தமிழகத்தில் 6 நகரங்களில் மையங்களை அமைத்து விட்டு, ஆந்திரத்தில் 12 நகரங்களில் மையங்களை அமைப்பது எந்த வகையில் நியாயம். தமிழகத்திற்கு கூடுதல் தேர்வு மையங்களை கேட்டுப் பெறுவதில் பினாமி அரசு தோல்வியடைந்துவிட்டது.

ஆந்திரத்திலும், பிற மாநிலங்களிலும் முதுநிலை மருத்துவ நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தாங்கள் வாழும் இடத்திலிருந்து அதிகபட்சமாக 3 மணி நேரத்தில் தேர்வு மையங்களை சென்றடைந்து விடும். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த பலர் வேறு மாநிலங்களுக்கு சென்று தான் தேர்வு எழுத வேண்டியுள்ளதால் குறைந்தது இரு நாட்கள் முன்பாக பயணத்தை தொடங்க வேண்டும். இதனால் ஏற்படும் சோர்வும், மன உளைச்சலும் தேர்வு எழுதும் திறனை பாதித்து விடும். எனவே, தமிழகத்தில் மேலும் பல நகரங்களில் அதிக எண்ணிக்கையில் தேர்வு மையங்களை தேசிய தேர்வு வாரியம் அமைக்க வேண்டும். இதற்காக தமிழக ஆட்சியாளர்கள் மத்திய அரசுக்கு கடுமையாக நெருக்கடி தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
#TNagainstNEET #SayNoToNEET #PGMedicine #NEETExamCenters #InjusticeToTN #Lead #Change #Progress #PMK
Message image
AnbumaniRamadoss.in
30th of October 2017 04:02 PM
கைவினைப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி
வரியை 5% ஆக குறைக்க வேண்டும்!

கைவினைப் பொருட்கள் மீது மத்திய அரசு விதித்துள்ள அளவுக்கு அதிகமான சரக்கு மற்றும் சேவை வரி காரணமாக அத்துறை மிகக்கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் ஏற்றுமதி குறைவதுடன் வேலையின்மை அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டதால் குறுகிய காலத்தில் பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த காலங்களில் வரி விதிப்பிலிருந்து விலக்கு பெற்றிருந்த பல பொருட்கள் இப்போது சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. அத்தகைய பொருட்களில் கைவினைப்பொருட்கள் குறிப்பிடத்தக்கதாகும். புதிய வரி விதிப்புக்கு முன்பாக கைவினைப் பொருட்களுக்கு 8 மாநிலங்களில் குறைந்தபட்சம் 5% மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்பட்டது. மீதமுள்ள 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கைவினைப் பொருட்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இதனால் கைவினைப் பொருட்கள் துறை வளர்ச்சி அடைந்தது.

ஆனால், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பின் கீழ் கைவினைப் பொருட்கள் மொத்தம் 3 வகையாக பிரிக்கப்பட்டு முறையே 12%,18%, 28% வரி விதிக்கப்படுகிறது. இதனால் இத்துறை கடந்த 3 மாதங்களில் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. கைவினைப் பொருட்களின் தன்மை குறித்து புரிந்து கொண்டால் மட்டுமே அத்துறை எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளை உணர முடியும். கிரானைட் மற்றும் கற்சிற்பங்கள், பித்தளை மற்றும் வெண்கலச் சிலைகள், ஓவியங்கள், விளக்குகள், தூண்கள், மலபார் பெட்டிகள் போன்றவை முக்கியமான கைவினைப் பொருட்கள் ஆகும். இவை அத்தியாவசியப் பொருட்கள் அல்ல. இவற்றை வாங்கியே தீர வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. அதனால் நியாயமான விலையில் விற்பனை செய்யப்பட்டால் மட்டுமே வீடுகளில் வைக்கவும், பரிசளிக்கவும் இவற்றை பலரும் வாங்குவார்கள்.

ரூ.10,000 மதிப்புள்ள ஓர் ஓவியத்துக்கு 28% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டால் அதன்விலை ரூ.2800 அதிகரிக்கும். இதனால் கடந்த 3 மாதங்களில் கைவினைப் பொருட்கள் விற்பனை மிகப்பெரிய அளவில் சரிந்து விட்டது. இதனால் இத்தொழிலில் தாக்குப்பிடிக்க முடியாது என்று அஞ்சி ஏராளமான கைவினைக் கலைஞர்களும், உற்பத்தியாளர்களும் வெளியேறி வருகின்றனர். இதே நிலை நீடித்தால் இத் தொழிலும், அதை நம்பியிருப்பவர்களும் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து வறுமையில் வாடும் ஆபத்து உள்ளது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் 40% வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் இந்தியாவுக்கு பெருமளவில் அந்நிய செலாவணி கிடைக்கிறது. அதுமட்டுமின்றி, தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவில் மட்டும் 1.75 கோடி பேருக்கு இத்துறை வேலைவாய்ப்பு அளித்திருக்கிறது. மாற்றுத்திறனாளிகள், பெண்கள், ஊரக இளைஞர்கள் உள்ளிட்டோருக்கு இத்துறையில் பெருமளவில் வேலைவாய்ப்பு கிடைத்து வரும் நிலையில், இவை அனைத்தையும் ஜி.எஸ்.டி வரி சிதைத்துவிடக்கூடும்.

கைவினைப் பொருட்களை கலையாகப் பார்க்க வேண்டுமே தவிர, தொழிலாகப் பார்க்கக்கூடாது. பொருளாதார மந்தநிலை நிலவும் சூழலில் மக்களின் வாங்கும் திறன் குறைந்திருப்பதால் கைவினைப் பொருட்களின் விற்பனை ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் கைவினைப் பொருட்கள் மீது ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுவது, குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்ததாம் என்ற கதையாக கைவினைப் பொருட்கள் உற்பத்தித் துறையை முற்றிலுமாக முடக்கி அழித்து விடும்.

எனவே, கைவினைப் பொருட்கள் மீது 12%, 18%, 28% என மூன்று வகையாக விதிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரியை ரத்து செய்து விட்டு, அனைத்து கைவினைப் பொருட்களுக்கும் ஒரே அளவில் 5% ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய அரசு முன்வர வேண்டும். கடந்த காலங்களில் கைவினைப் பொருட்களுக்கு வலி விலக்கு அளித்த மாநிலங்கள் இப்போது மாநில ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அதன் மூலம் கைவினைப் பொருள் துறையை காக்க வேண்டும் எனக் கோருகிறேன்
#GST #Handicrafts #Injustice #LowerGST #UnionGovt #TNGovt #ReduceTo5% #ExportPromotion #ForexReserves #CottageIndustries #Lead #Change #Progress #PMK
Message image
AnbumaniRamadoss.in
28th of October 2017 07:58 PM
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி , மத்திய சென்னை மேற்கு மாவட்டம், வில்லிவாக்கம் சட்ட மன்ற தொகுதி சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம்.
இடம் - அயனாவரம் ஜாயிண்ட் ஆபீஸ் அருகில் #Lead #Change #Progress #PMK #DengueFever #TNGovt #MisGovernance
AnbumaniRamadoss.in
24th of October 2017 03:53 PM
தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் இன்று ஏரியூரில் பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. #MPLADS #Dharmapuri #MyConstituency #Lead #Change #Progress #PMK
Message image
AnbumaniRamadoss.in
23rd of October 2017 05:19 PM
இன்று தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதி, அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொது மக்களிடம் குறைகேட்கும் நிகழ்ச்சியை தலைமையேற்று, மக்கள் குறைகளை கேட்டறிந்து, உரையாற்றி, மக்களுடைய விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டேன். #MyConstituency #Dharmapuri #Harur #Lead #Change #Progress #PMK
Message image
AnbumaniRamadoss.in
23rd of October 2017 01:33 PM
ஆட்சியர் அலுவலகத்தில் 4 பேர் தீக்குளிப்பு:
பினாமி அரசு வெட்கப்பட வேண்டும்!

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாளையங்கோட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரை அடுத்த காசி தர்மம் பகுதியைச் சேர்ந்த இசக்கி முத்து மற்றும் அவரது குடும்பத்தினர் தற்கொலை செய்து கொள்ள கந்து வட்டிக் கொடுமை தான் காரணம் என்று கூறப்படுகிறது. கந்துவட்டிக்காரர் ஒருவரிடம் இசக்கிமுத்து ரூ.1.30 லட்சம் கடன் வாங்கியதாகவும், அதற்கு வட்டியுடன் சேர்த்து ரூ.2.30 லட்சம் செலுத்திய பிறகும் அவரிடம் கூடுதல் வட்டி கேட்டு கந்து வட்டிக்காரர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் தான் இசக்கி முத்துவும் அவரது குடும்பத்தினரும் உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளனர்.

கந்து வட்டியால் அப்பாவி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் பலர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பதால் தான் 14.11.2003 அன்று தமிழகத்தில் கந்து வட்டித் தடை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், இச்சட்டம் பயன்படுத்தப்படுவதே இல்லை. கந்து வட்டிக் கேட்டு கொடுமைப்படுத்துவதாக காவல்துறையிடம் இசக்கி முத்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் கந்துவட்டிக்காரர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவரையே காவல்துறை மிரட்டியுள்ளது. அதன்பிறகும் தம்மைக் காப்பாற்றும்படி மாவட்ட ஆட்சியரிடம் இசக்கிமுத்து 6 முறை புகார் அளித்துள்ளார். ஆனால், பல மாதங்களாகியும் அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழக அரசால் இயற்றப்பட்ட கந்துவட்டிச் சட்டத்திற்கு காவல்துறையினரும், மாவட்ட ஆட்சியரும் எந்த அளவுக்கு மரியாதைக் கொடுக்கின்றனர் என்பதற்கு இதுதான் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

குடிமக்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், உடுக்கை இழந்தவன் கைபோல அவர்களின் இடுக்கண் கலைவது தான் ஆட்சியாளர்களின் பணியாகும். ஆனால், 6 முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத ஆட்சியர் அந்தப் பணிக்கே தகுதியற்றவர் ஆவார். அதேபோல், கந்துவட்டிக்காரருக்கு ஆதரவாக செயல்பட்டு இசக்கிமுத்துவை மிரட்டிய காவல்துறையினர் கந்துவட்டிச் சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ஆவர். இத்தகையக் கொடுமைகளை கண்டும் காணாமல் ஊழல் மூலம் தமிழகத்தைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் இதற்காக வெட்கித் தலைகுனிய வேண்டும்.

கந்து வட்டி மிகவும் கொடுமையானது. தின வட்டி, மணி வட்டி, மீட்டர் வட்டி, ரன் வட்டி எனப் புதுப்புது பெயர்களில் வட்டிக்கு பணம் கொடுக்கும் கந்துவட்டிக்காரர்கள், கொடுத்த கடனை திரும்ப வசூலிப்பதற்காக அனைத்து வகையான சட்ட விரோத செயல்களையும் கையாளுகின்றனர். பிழைப்புக்காக வியாபாரம் செய்யும் ஏழை மக்கள், அதற்கான முதலீடு இல்லாததால் கந்துவட்டிக்காரர்களிடம் பணம் வாங்குவதும், தாங்கள் ஈட்டிய வருமானம் முழுவதையும் அதற்கான வட்டியாகக் கொடுத்துவிட்டு, அதற்கு மேலும் தருவதற்கு எதுவும் இல்லாததால் கந்துவட்டிக்காரர்களிடம் கொத்தடிமையாக வேலை செய்வதும் வாடிக்கையாகி விட்டது. பல தருணங்களில் கொடுத்த கடனை திரும்ப செலுத்த முடியாதவர்களின் வீடு, நிலம் போன்றவை பறிக்கப்படுகின்றன. சில நேரங்களில் சிறுநீரகத்தை கட்டாயப்படுத்தி அகற்றி விற்று பணத்தை திருப்பி வசூலித்த கொடூரங்களும் நிகழ்ந்துள்ளன.

தமிழ்நாட்டில் கந்துவட்டிக் கொடுமையால் மட்டும் கடந்த 7 ஆண்டுகளில் 823 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கந்துவட்டிக் கொடுமை குறித்து தாமாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் சென்னை உயர்நீதிமன்றம், கந்து வட்டி வசூலிப்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. ஆனாலும் அதனால் எந்த பயனும் இல்லை. இதற்குக் காரணம் கந்துவட்டிக்காரர்களுக்கு ஆளுங்கட்சியினர் மற்றும் காவல்துறையினரின் ஆதரவு இருப்பது தான்.

ஏழை மற்றும் அப்பாவிகளின் குடும்பத்தை நாசமாக்கும் கந்துவட்டிக் கொடுமை தமிழ்நாட்டில் இனியும் நீடிக்கக் கூடாது. அதற்காக 2003-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கந்துவட்டி தடுப்புச் சட்டத்தை அரசு முழுமையாக செயல்படுத்த வேண்டும். இசக்கி முத்து குடும்பத்தின் தீக்குளிப்புக்குக் காரணமாக கந்துவட்டிக்காரர், காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், இசக்கி முத்து உள்ளிட்ட நால்வருக்கும் 70 விழுக்காட்டுக்கும் கூடுதலான தீக்காயங்கள் ஏற்பட்டு இருப்பதால், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அவர்கள் நால்வருக்கும் பாளை மருத்துவமனையில் தரமான மருத்துவம் அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். #Tirunelveli #Nellai #Shame #TNGovt
Message image