தமிழக பத்திரிகைகளின் தலைஎழுத்து அதர்மம் ஆகும்

தமிழக பத்திரிகைகளின் தலைஎழுத்து அதர்மம் ஆகும்

சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து
ஒருபால் கோடாமை சான்றோர்க்கணி!

என்பது வள்ளுவர் வாக்கு. அந்த கருத்தின் மையப் பொருளான எவர் பக்கமும் சாயாமல் நடுவு நிலைமையைக் கடைப்பிடிப்பதே பத்திரிகை தர்மம் ஆகும்.

போர் முனையை விட பேனா முனையே வல்லமை படைத்தது. பத்திரிகையே ஒரு நாட்டின் முதுகெலும்பு என்றும் மக்களின் குரலை பிரதிபலிப்பாக முழங்கும் என்றும் அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இன்று நடப்பதென்ன?

பத்திரிகை தன் வளத்தை மேம்படுத்திக் கொள்ள முக்கிய அரசியல்வாதிகளின் கைப்பாவையாகும் இழிவு நிலையை எண்ணி மக்கள் வருந்துகின்றனர். காரணம்: மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய பத்திரிகைகள் இப்படி பணத்துக்காக சோரம் போகின்றனவே என்பதுதான்.

ஒரு கூட்டம் துதிபாடுகிறது

அரசாங்கத்தின் விளம்பரம் கிடைக்க வேண்டும். ஆட்சியாளரின் தயவு வேண்டும் என்ற காரணங்களுக்காக அரசாங்கத்தைத் தட்டிக் கேட்க வேண்டிய பத்திரிகைகள் மாறாக ஆட்சியாளர்களைத் துதித்துக் கொண்டும் போற்றிக் கொண்டும் தங்களின் விசுவாசத்தைக் காட்டிக்கொள்கின்றன. பத்திரிகைகளைப் படிக்கும் போதே அவற்றையெல்லாம் மக்கள் புரிந்து கொள்கிறார்கள். உணர்ந்து கொள்கிறார்கள் என்பது உண்மையிலும் உண்மை. இந்த அவல நிலை மாற வேண்டும். பணநாயகத்தை வெல்லும் ஜனநாயகமாக பத்திரிகைகள் மாற வேண்டும்.

விலை போகும் நிலை

பல்லாண்டு காலமாக பாரம்பர்யமிக்க அஞ்சா நெஞ்சமுடைய பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருந்த ‘ஆனந்த விகடன்’ இன்று ஸ்டாலின் கை ஆயுதமாக மாறியிருப்பது சகித்துக்கொள்ள முடியாத – சத்தியம் விலை போகும் நிலையையே காட்டுகிறது.

ஸ்டாலினுடைய பணத்துக்கு அடிமையாகிவிட்டது ‘ஆனந்த விகடன்’ என்பது முதல்வர் ஜெயாவின் குற்றச்சாட்டு.

பத்திரிகை உலக ஜாம்பவவான்களே இப்படி தரம் இழந்து போனால் மற்ற ‘துக்கடா’ பத்திரிகைகள் பற்றி சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. அவைகள் இப்படியும் அப்படியுமாக அந்தர்பல்டி அடிப்பதும் சமயம் பார்த்து “ஜால்ரா” தட்டுவதுமாக அல்லவா அவர்கள் வாழ்கின்றனர். அவர்களின் நிலை என்றும் ‘திரிசங்கு’ நிலையாகவே காணப்படுகிறது.

பயம் போனது ஏன்?

பத்திரிகை என்றால் ஆளும் அரசாங்கமே பயந்து நடுங்கும். எல்லா அரசியல்வாதிகளும் கூட அஞ்சி நடந்துகொள்வார்கள். நாட்டில் நீதி நேர்மை நியாயம் காக்கப்படும். ஆனால் இன்று எல்லாமே நேர்மாறாக இருக்கிறது. பத்திரிகை பயம் போனது ஏன்? எல்லாம் பணம்! பணம்! பணம்! என்றால் இந்த நாட்டின் கதி என்னாவது?

பத்திரிகையாளர்களே பத்திரிகை முதலாளிகளே கொஞ்சம் திசை திரும்புங்கள். அப்போது நாடு நலம் பெறும்! நாட்டு மக்கள் உங்களை வாழ்த்துவார்கள். உங்களுக்கு சட்டம் வணங்கி வணக்கம் கூறும். சரித்திரம் உங்கள் சாதனைகளைப் பதிவு செய்யும். நீங்கள் சிங்கமாக சிலிர்த்து தலை நிமிர்ந்து நடந்துச் செல்லலாம். உங்களுக்கும் பா.ம.க.வின் வேண்டுதல் ஒன்றே. மாற்றம் – முன்னேற்றம் என்பதே.

அதாவது ஆட்சி மாற்றம் – மக்களின் வாழ்க்கை நிலையில் மாற்றம்.

முன்னேற்றம் – சமுதாயப் பணியில் பா.ம.க.வும் மக்களும் கைகோர்த்து முன்னேறிச் செல்வது – மக்களாட்சித் தத்துவத்தை நடைமுறைப்படுத்தி நாட்டை பண்படுத்துவதே பா.ம.க.வின் இலட்சியம். பத்திரிகைகளின் ஆதரவு பா.ம.க.வுக்கு தேவை என்று சொல்லவும் வேண்டுமோ?

பத்திரிகை தர்மத்தை கைவிடாதீர்

அன்பு பத்திரிகையாளர்களே! உங்கள் தகுதியை நீங்களே உணருங்கள். இமயமாக நிற்கும் நீங்கள் சிறு குன்றாக ஏன் மாற வேண்டும் எங்கள் பா.ம.க. ஆட்சியிலே உங்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்கும். காரணம் உங்களை வைத்துத்தானே நாட்டைத் திருத்த முடியும். எங்களை வழிநடத்தக்கூடியது உங்கள் பொறுப்பு. “தவறு நேரிடப் போகுது” என்று தெரிந்தவுடனே எங்கள் தலையில் குட்டி உங்கள் ‘தலையங்கத்தால் திட்டி’ நாங்கள் சரியான பாதையில் செல்ல வைக்கப் போவது நீங்கள் தான். எங்கள் தேர்தல் அறிக்கையில் பத்திரிகை சுதந்திரமும் ஒன்றாக இருக்கிறது. இதை நீங்கள் உணர்ந்து செயல்படுவீர்களாக!

10 Comments
 • karthigayan
  Posted at 17:00h, 05 February Reply

  0

  Good article.. But I dnt think media will change..
  Let’s hope..

 • Mukesh
  Posted at 23:42h, 06 February Reply

  0

  Let’s hope for the change. Anbumani sir. Keep doing your good work.

 • செந்தில் முருகன்
  Posted at 14:26h, 11 February Reply

  0

  பண்டம் மாற்றும் முறை வரும் வரை பணத்தின் ஆதிக்கும் இருக்கும்..அதற்க்கு விவசாயம் செழிக்க வேண்டும்.விவசாயம் செழிக்க மழை வேண்டும். மழை வேண்டும் என்றால் வானிலை சரியாக வேண்டும்.. வானிலை க்கு மரம் வேண்டும்.. மரங்களை பாதுகாத்தால் உடனடி தீர்வு..அதற்கு முன் லஞ்சம் எனும் அரக்கனை உலகை விட்டு விலக்க வேண்டும்.. பஸ்ல கண்டக்டர் 1 முதல் 3 ரூ வரை திருடராங்க.. மீதி கேட்ட மேலும் கீழும் பாக்றான்..ஏதோ அவன் பணத்த கேட்ட மாதிரி..அவனும் லஞ்சத கொடுத்தா தான் வேலை..முடிஞ்சது எல்லா போச்சு…இனி ஒரு நாள் பட்டிணி இருந்தா இரண்டாம் நாள் இருக்க கூடாது இவ்வுலகில்….

 • Seemajayapriya
  Posted at 14:30h, 11 February Reply

  0

  ?????? well said…

 • சக்தி
  Posted at 01:27h, 12 February Reply

  0

  ஊடகம் எப்போது தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றப் போகிறதோ தெரியவில்லை

 • C.RAVI VARMA
  Posted at 16:54h, 17 March Reply

  1

  Anandha Vikatan is the only one which is criticising the ruling party’s misdeeds. For this we have to garland Vikatan. All others including the famous english paper adamantly refuse to reveal the despotic and corruptive nature of the rulers. Probably this is the most corruptive government ever in the world surpassing the previous ruler by leaps and bounds. Also totally non governing government ever ruled a state. Naturally your voice will never be published in the news papers. One famous communal tamil paper is making fun of you by posting sarcastic remarks. Your brilliant views are wantonly censored by these people.They are thinking that only a particular community people are fit to rule the state and so they are encouraging the ruler and giving false pictures.You please carry on. People watching your views are increasing slowly. In the coming days it will increase multi fold. You are going to win. I have no doubt. Make Tamil Nadu like Singapore.

 • GOPINATH KRISHNAN
  Posted at 14:34h, 17 May Reply

  0

  Very very good view on thamiznadu

 • BALAJI J
  Posted at 15:43h, 21 December Reply

  0

  Yes Sir,

  I agree with you.

 • KAILASAM
  Posted at 12:22h, 10 January Reply

  0

  Very good article……

 • Murugesan
  Posted at 13:51h, 06 January Reply

  0

  Super 👍

Post A Reply to சக்தி Cancel Reply