மது ஒழிப்பு

மது ஒழிப்பு

மனிதனை மாய்க்கும்
மதுவினை நிறுத்து!

இன்றைய தமிழக மக்களின் நிலை யாரும் மது அருந்தலாம் என்கிற மறைமுக அறிவுரையாக மதுக்கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. பெரியவர்களைப் பார்த்து (சிறுவர்களும்) இளைஞர்களும் (கல்லூரி மாணவர்களும்) குடிப்பழக்கத்திற்கு ஆளாகிறார்கள்.

ஒரு கட்டிங் இரண்டு கட்டிங்ஸ் என வளர்ந்து முடிவில் மொடாக்குடி மன்னர்களாகி விடுகின்றனர். அதனால் வீடு தெரு பகுதி சமுதாயம் நாடு என எல்லா சூழ்நிலைகளும் பாதிக்கப்பட்ட அவல நிலையே இன்று குமரி முதல் சென்னை வரை வளர்ந்து வருகிறது. அதனால் குடும்பம் சீரறிகிறது. குடும்பத்தின் முன்னேற்றம் தடைபடுகிறது. மக்களிடையே தனி மனித ஒழுக்கம் கெடுகிறது. அது சமுதாயத்தையே கெடுக்கிறது. தமிழ்ப் பண்பாடு நாகரீகம் சிதைகிறது. மதுவினால் நன்மை ஒன்றும் இல்லை என்றாலும் தீமைகளே அதிகம்.

1. மதி மயக்கம்
2. தன் உடல் தளர்ச்சி
3. நோய்களுக்குள் வீழ்தல்
4. காம இச்சை கண்களை மறைகிறது தவறு செய்ய தூண்டுகிறது
5. சண்டை சச்சரவு உயிர்பலி ஏற்படுகிறது
6. சட்டம் ஒழுங்கு கெடுகிறது.
7. குடும்பத்தில் வறுமை ஏற்படுகிறது
8. வறுமையினால் குடும்பம் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறது.
9. அமைதிக்குப் பங்கம் ஏற்படுகிறது.
10. மொத்தத்தில் நாடே பாழாகிறது.

‘துளி மது’ இல்லாத
தூய தமிழகம்

உழைக்கும் மனிதனை உருமாறி வைப்பதும் வழி மாறச் செய்வதும் மது ஆகும். மனிதன் மாற்றம் காண – முன்னேற்றம் அடைய துளி மது இல்லா தூய தமிழகத்தை பா.ம.க. உருவாக்கும்.

இருண்ட வீட்டிற்கு ஓர் கைவிளக்கு – இருண்டு கிடக்கும் தமிழகத்திற்கு பா.ம.க. ஒரு திருவிளக்கு – ஒளிவிளக்கு!

இருளை அகற்றிடுவோம் ஒளியை ஏற்றிடுவோம்.

34 ஆண்டுகளாக மதுவை ஒழிக்க மருத்துவர் ஐயா ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார். தனக்குத் துணையாக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை வைத்துப் போராட்டங்கள் பல நடத்தி நாட்டு மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி அதன் பயனாக மதுவுக்கு எதிராக மிகப் பெரிய கொந்தளிப்பை தமிழக மக்களிடையே உருவாக்கியுள்ளனர்.

மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் பா.ம.க. ஆட்சி வந்தவுடன் இடும் ‘முதல் கையெழுத்து’ பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்தும் உத்தரவாகத்தா இருக்கும் என்று உறுதி கூறுகிறோம்.

மதுவினால் வரும் வருமானம்
தேவையில்லை

கண்ணை இழந்து சித்திரம் வாங்குதல் தகுமோ? மதுவினால் வரும் வருமானத்தை விட வேறு துறையில் அதிக வருமானம் – பொருளாதாரம் – ஜீவாதாரம் – நிதி ஆதாரம் பெருக்கி கொள்வோம். உதாரணம்: வேளாண்மையைப் பெருக்கி நாட்டில் பொருளாதார மேம்பாடடையச் செய்வோம். உண்மையாக உழைக்கும் மனித வளத்தின் வழியே இயற்கை வளத்தைப் பெருகச் செய்வோம்.

கள்ளச் சாராயம்
ஒழிக்கப்படும்

மதுவிலக்கு கொண்டு வந்துவிட்டால் கள்ளச் சாராயம் தோன்றிவிடுமே என்று சிலர் நினைக்கலாம். அதற்குத்தான் சட்டம் இருக்கிறதே. சட்டத்தின் கரம் கொண்டு கள்ளச்சாராயம் தோன்றாமல் செய்ய முடியும். மேலும் அடிப்பட்டவர்களை உரிய நபர்களைக் கொண்டு உபதேசம் செய்வதோடு அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் பல உருவாக்கி அவர்களின் தனித்திறமையை வல்லமையைக் காணச்செய்வோம். எனவேää கள்ளச் சாராயத்திற்கு வாய்ப்பே இல்லை.

ஆளும் அ.தி.மு.க.வே!
மனிதனை மாய்க்கும்
மதுவினை நிறுத்து!
மதுவிலக்கை நடைமுறை படுத்து!!

12 Comments
 • Amutha w/o umachandran
  Posted at 11:35h, 06 April Reply
  1

  மாண்புமிகு சின்ன ஐயா அவர்களுக்கு
  காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டம் சித்தாமுர் ஊராட்சி ஒன்றியம் முகுந்தகிரி ஊராட்சிக்குட்பட்ட புதூர்கிராமம். இங்கு50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம் இக் கிராமத்தை ஒட்டி பழவூர் எல்லையில் புதியதாக மதுபான கடை திறக்க கட்டிடம் கட்டும் பணி நடை பெருகிறது.இங்கு மகளிர் சுய உதவி குழுசார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மதுகடைவேண்டாம் என்று தீர்மானம் இயற்றி மனு கொடுக்கப்பப்டது. இதை அறிந்த உள்ளுர் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியை. சேர்நத ஆண்கள் பெண்களை மிரட்டி போராடதவாறு பயமுறித்தி வைத்துள்ளனர். அதனால் ஒற்றுமையுடன் போராட முன்வருவதில்லை. ஆதலால் தாங்கள் என்கிராமத்தாரையும் பொதுமக்களையும் காப்பாற்றுங்கள். கட்டிடம் கட்டும் இடம் விவசாய நிலமாகும் மேலும் பெண்கள், பள்ளி மாணவர்கள், அதிகமாக நடமாடும இடமாகும். தாஙகளும் மதிப்பிற்குரிய அய்யா அவர்களும் அரசியலையும் தாண்டிஉண்மையாக மதுவுக்கு எதிராக போராடுபவர்கள் என்பது தமிழ்நாடே அறிந்த ஓன்று. ஆகையால் எங்கள் பகுதி மட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் மதுகடைதிறக்காமல அய்யாவும் சின்னய்யாவும் நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன. இப்படிக்கு
  அமுதாஉமாசந்திரன்

 • kasi nadar
  Posted at 23:21h, 02 April Reply
  1

  3300 மதுக்கடைகளை மூடுவதற்கு காரணமாக இருந்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் தமிழர் ராமதாஸ் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்

 • RP.Jayavel
  Posted at 07:34h, 02 December Reply
  1

  Dear Brother
  Good morning
  தமிழ்நாடு மக்களுக்கு பல நல திட்டகள் சொன்னிர்கள் 2016 -ல்
  மது ஒழிப்பு உங்கள் மூலம் மட்டும் தான்
  பூரணமாக ஒழிக்க முடியும்
  தமிழ்நாடு உள்ள இளைஞ்சர்கள் அனைவரும் உங்கள்
  தம்பிகள்
  இவன்
  Dr.அன்புமணி ராமதாஸ்MP அவர்களின்
  தம்பிRPJ( எ )RP.Jayavel -D.M.E,B.Tech

 • Narayanakumar
  Posted at 16:25h, 01 May Reply
  0

  About NEET exam..Why are our VIP people are mum. They can agitate openly to save our school children…and against this studentcide especially Tamilnadu. Please act…. Pl share to all

 • sureshvijay
  Posted at 18:56h, 08 March Reply
  0

  போதைப் பழக்கத்திற்கு எதிரான குறும்படம் ஓலம்
  https://youtu.be/91imMzeL2Nc

Post A Comment