கறைபடாத கரமா (கையா) ஸ்டாலினுடையது?

கறைபடாத கரமா (கையா) ஸ்டாலினுடையது?

நெஞ்சு பொறுக்கு திலையே – இதை
நினைத்து நினைத்திடினும் வெறுக்குதிலையே
கஞ்சி குடிப்பதற் கிலார் – அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சம் என்றே – நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்தே
துஞ்சி மடிகின்றாரே – இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே!

-என்னும் மகாகவியின் பாடல்வரிகளை நினைக்கும் போது நமது நெஞ்சும் பொறுக்குதிலையே என்று தான் கூறவேண்டும்.

காரணம் வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் 70 விழுக்காடு என்பதுதான். இப்படி ஒருபக்கம் மக்களின் வயிறு காய்ந்து கொண்டிருக்க தமிழகத்தில் ஒரு குடும்பம் மட்டும் குபேரர்களாக மாறிவிட்டது சரித்திரச் சான்றுகளாக பதிவு செய்யப்பட்டுவிட்டது தமிழ் மக்களின் அவல நிலையே ஆகும்.

முன்னாள் துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் கரம் கறைபடாத கரம் என்று அவரால் சொல்ல முடியுமா?

அவரைச் சுற்றியுள்ள நம்பிக்கை நட்சத்திரங்களுக்கு சட்டங்கள் வளைந்து கொடுக்கக்கூடிய சந்தற்பங்கள் – வாய்ப்புகள் வசதிகள் பரிந்துரைகள் பரிந்துரைகளால் வரும் மிகப்பெரிய நன்மைகள். அந்த நன்மைகளில் உள்ளடங்கிய அப்பாவி மக்களின் ஏமாற்றங்கள் மிரட்டல்கள் உருட்டல்கள் பயங்கர விளைவுகள் நாட்டுமக்கள் யாவரும் அறிந்தவை என்பதே சத்தியம் – சாட்சி – ஆகும்.

மறக்க முடியாத
ஸ்பெக்ட்ரம் ஊழல்

முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் ஆ.ராஜா ஆகியோர் ‘பல்லாயிரம் கோடி’-சுருட்டியவை நாடே அறியும். இன்று அவர்களின் நிலை வழக்குமன்றத்தில் நிற்கிறது. குற்றம் நிரூபணம் ஆகி அதற்குரிய தண்டனை விரைவில் வழங்கப்பட இருக்கிறது என்பதை செய்தித்தாள்களின் வழியே எல்லா மக்களும் அறிவர்.

அமைச்சர்களைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற கனிமொழியும் அந்த ஊழலில் இருப்பதும் அதன் காரணமாக சிறைச்சாலையில் அவர் இருந்தது இந்த நாடே அறியும்.

நில அபகரிப்பு

தமிழ்நாட்டில் நில அபகரிப்பு மோசடி நடந்தது ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும். தெரியும் என்பதைவிட தன் கட்சிக்காரர்களுக்கு ஊக்கம் கொடுத்தார். அவர்கள் செய்தவைகள் அனைத்தும் ஸ்டாலின் அறிவார் என்பதை விட அவர் அவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் என்பதற்கு இருவேறு கருத்துக்கு இடமில்லை நிஜம் நிஜம்தான். பொய்யில்லை!

பினாமிகள் பெயரில் சொத்துக்கள் பலப்பல

ஒருவர் கூறினார்: ஏனய்யா அந்தக் குடும்பத்தினர் ஊழல் செய்து பணம் சம்பாதித்தார்கள் என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? அவர்கள் வைத்திருக்கும் எல்லாவற்றிற்கும் ஆதாரம் உண்டு – அதாவது கணக்கு சரியாக இருக்கிறது என்று கூறினார்.

திருடுபவர்கள் திட்டமிட்டுத்தானே திருடுவார்கள் – தாங்கள் சேர்க்கும் சொத்துக்களை தன் பெயரில் வைத்துக் கொள்ளாமல் தனக்கு நம்பிக்கையான நபர்களின் பேரில் வைத்திருப்பது நடைமுறை உண்மையாகும். இது ஸ்டாலினுக்கும் பொருந்தும்.

இப்படி ஒரு குடும்பமே பெருங்கொள்ளைக்கு காரணமாக இருக்கிறது. இருந்தது என்பதை நாடே அறியும்.

மாற்றம் – முன்னேற்றம்

ஊழலற்ற ஆட்சிதான் மக்களுக்கு உண்மையான நன்மைகளை வழங்க முடியும். பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் கொள்கையின் முக்கிய அம்சங்களில் ஊழல் அற்ற ஆட்சியை நடத்துவது.

இன்று நாட்டை சீரழித்துக் கொண்டிருப்பது லஞ்ச லாவன்யம் ஆகும். அரசாங்க அலுவலகங்கள் – அலுவலக பணியாளர் முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரை லஞ்சம் வாங்குகிறார்கள் என்பது பொதுமக்களின் ஒட்டுமொத்த தீர்ப்பு.

ஊழல் ஒழிந்தால் – நாட்டில் மாற்றம் – முன்னேற்றம் ஏற்படும். எனவே ஊழலை ஒழித்தால் தான் முன்னேற்றத்தைப் பற்றி நினைத்துப்பார்க்க முடியும். முன்னேற்றத்திற்கான முதல்படியாக ஊழலை ஒழிப்பதே பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நோக்கமாகும். இதற்காகத்தான் ஒரு பைசா ஊழல் இல்லாத தமிழகம் அமைப்போம் என்ற முழக்கத்துடன் பாட்டாளி மக்கள்கட்சி களம் இறங்கியுள்ளது.

பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிக்க லோக்-ஆயுக்தா (டுழம-யுலயமவய) அமைப்பு ஏற்படுத்தப்படும். அரசு அதிகாரிகள் தொடங்கி முதலமைச்சர் வரை அனைவரும் இந்த சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவார்கள்.

இலவசங்கள் வேண்டாம்

ஒரு மனிதனுக்கு உண்ண மீன் தருவதை விட அந்த மீனைப்பிடித்து வியாபாரம் செய்து வாழ்க்கையில் முன்னேற அம்மனிதனுக்குத் தூண்டில் வழங்குவதே சாலச்சிறந்தது.

அவ்வகையில் எல்லோருக்கும் வேலை எல்லோருக்கும் ஊதியம் – அப்போது அங்கே இலவசங்களுக்கு வேலை இல்லை. யாருடைய தயவும் இல்லாமல் ஏழை எளியோர் தங்களை தன்னிறைவு படுத்திக்கொள்வதோடு தங்களுக்குரிய ஆளுமை வல்லமையோடு மகிழ்ச்சியோடு வாழ முடியும். எனவே தான் பா.ம.க. ஒரு பைசா ஊழல் இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்று கூறுகிறது.

மக்களின் மனம் மாற வேண்டும்.

நல்லது எது கெட்டது எது என்று தீர்மானிக்கும் வல்லமை பெற்ற தமிழக மக்கள் இதுவரை நடந்த ஊழல் ஆட்சிக்குப் பதிலாக பாட்டாளி மக்கள் கட்சியை ஆட்சியில் அமர்த்தினால் ஊழலற்ற மக்களின் முன்னேற்ற ஆட்சியைத் தருவோம் என்று உறுதி கூறுகிறோம். ஒரே கட்சி ஆட்சி என்பது ஊழலுக்கு வழிவகுக்கும். எனவே ஆட்சி மாற்றம் ஒன்றே மக்களின் முன்னேற்றம் ஆகும் என்பதைக் கனிவுடன் கூறுகின்றோம்.

1Comment
  • karthigayan
    Posted at 19:12h, 13 January Reply

    0

    superrr stats

Post A Comment