என்.எல்.சி கோரிக்கை: மின்துறை அமைச்சர் பியுஷ் கோயலிடம் அன்புமணி இராமதாசு நேரில் வலியுறுத்தல்

என்.எல்.சி கோரிக்கை: மின்துறை அமைச்சர் பியுஷ் கோயலிடம் அன்புமணி இராமதாசு நேரில் வலியுறுத்தல்

என்.எல்.சி. தொழிலாளர்கள் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு ஆணையிட வேண்டும் மின்துறை அமைச்சர் பியுஷ் கோயலிடம் அன்புமணி இராமதாசு நேரில் வலியுறுத்தல்
மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல் அவர்களை தில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் பா.ம.க. முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளரும், தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களை இன்று பிற்பகல் 1.00 மணிக்கு சந்தித்து பேசினார்.  இச்சந்திப்பின்போது  நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன பாட்டாளி தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் செல்வராஜ், பெருமாள், திலகர், வைத்தியநாதன், ஆறுமுகம் ஆகியோரும் உடன் இருந்தார்கள்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக வேலைநிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டம் நீடித்தால் மின் உற்பத்தி தடை பட்டு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பது குறித்து  இச்சந்திப்பின் போது மத்திய அமைச்சரிடம் அன்புமணி இராமதாசு சுட்டிக்காட்டினார்.
‘‘1997 ஆம் ஆண்டு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே 10 ஆண்டுகால ஊதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அப்போது 60% ஊதிய உயர்வும் பிற சலுகைகளும் வழங்கப்பட்டன. அதன்பின் 2007 ஆம் ஆண்டில் 5 ஆண்டுகளுக்கான ஊதிய ஒப்பந்தம்  கையெழுத்திடப்பட்ட போது 25% ஊதிய உயர்வும் பிற சலுகைகளும் வழங்கப்பட்டன. இப்போது புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்களின் போது 24% ஊதிய உயர்வும் பிற சலுகைகளும் வழங்க வேண்டும் என கோரி வருகிறார்கள். ஆனால், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன அதிகாரிகள்  இந்த கோரிக்கையை ஏற்க மறுக்கிறார்கள். ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்’’ என்று மத்திய அமைச்சர் பியுஷ் கோயலிடம் மருத்துவர்அன்புமணி இராமதாசு கோரினார்.
 அதுமட்டுமின்றி, 2005 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி என்.எல்.சி. தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குதல், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பணிநிலைப்பு செய்வதற்காக இன்கோசெர்வ் நிறுவனத்தில் சேர்க்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களில் ஓய்வு பெறும் நிலையில் இருப்பவர்களுக்கு உடனடியாக பணி நிலைப்பு வழங்குதல், சுரங்கம் அமைக்க நிலம் வழங்கியவர்களின் குடும்பத்தினருக்கு பணி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் அன்புமணி வலியுறுத்தினார்.
கோரிக்கைகளை கேட்ட மத்திய அமைச்சர் கோயல் அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.
2 Comments
 • Naren
  Posted at 19:41h, 13 April Reply

  0

  Hi Team,

  I have read the DMK Manifesto recently I am not happy with the education and farmer loan waiver.

  It will change the people attitude to expect waiver for every year. this is also one kind of gift to get Vote.

  ~
  Naren C

 • naga
  Posted at 14:24h, 24 May Reply

  0

  He only meet central ministers for TN problems. One man army

Post A Reply to naga Cancel Reply