தினமலர்: மாணவ, மாணவியர் கேட்ட கேள்விகளுக்கு, அன்புமணி அளித்த பதில்

தினமலர்: மாணவ, மாணவியர் கேட்ட கேள்விகளுக்கு, அன்புமணி அளித்த பதில்

‘தினமலர்’ நாளிதழ் இணைய தளம் மூலம், மாணவ, மாணவியர் கேட்ட கேள்விகளுக்கு, அன்புமணி அளித்த பதில்:

திவ்யஸ்ரீ: சென்னையில் பல இடங்களில், ‘மாற்றம், முன்னேற்றம், அன்புமணி’ என்று தலைப்பிட்டு, சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதன் அர்த்தம் என்ன?

அன்புமணி: தமிழகத்தில், 50 ஆண்டுகளாக, ஒரு தேக்கநிலை இருக்கிறது. தி.மு.க., – -அ.தி.மு.க., என இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் எந்த துறைகளிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. ‘டாஸ்மாக்’ துறையில் மட்டும்தான் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்த தேக்கநிலை மாறவேண்டும்.நான் மத்திய அமைச்சராக இருந்தபோது, அவசர ஆம்புலன்ஸ், தேசிய கிராமப்புற சுகாதார திட்டம், புகையிலை ஒழிப்பு போன்ற நல்ல திட்டங்களை கொண்டு வந்தேன்; போலியோவை ஒழித்து இருக்கிறேன்.

தமிழக மக்கள் எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால், மாற்றங்களை எங்களால் ஏற்படுத்த முடியும். மக்களால் மட்டுமே மாற்றத்தைக் கொடுக்க முடியும், எங்களால் அவர்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்க முடியும். அதனால்தான்,’மாற்றம், முன்னேற்றம், அன்புமணி’ என்கிறோம்.

ரியாஸ் அகமது: இந்த வாசகம் அமெரிக்க அதிபர் ஒபாமாவை, பின்பற்றி வெளியிடப்பட்டதாக இணைய தளங்களில் கருத்துகள் கூறப்பட்டுள்ளன. விளம்பரத்திலேயே மாற்றம் இல்லாதபோது, ஆட்சியில் நீங்கள் எப்படி மாற்றம் கொண்டு வருவீர்கள்?

அன்புமணி: இந்த வாசகத்துக்கு ஒபாமா, எந்தக் காப்புரிமையும் பெறவில்லை. இது அவருடைய சொந்த வாசகமும் கிடையாது. அவருக்கு முன், பலர் இதை பயன்படுத்தி இருக்கின்றனர். எங்கள் விளம்பரம், இளைஞர்களிடம் அதிகளவில் பரவி இருக்கிறது. அதனால்தான், கேள்விகள் எழுகின்றன. நல்லது எங்கு நடந்தாலும், நாமும் அதைப் பின்பற்ற வேண்டும்.

குகன்: நீங்கள் முதல்வரானால், மதுவை ஒழிப்பேன் என்கிறீர்கள். மது மூலம் தான் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மதுவை ஒழித்து விட்டு, எந்த மாதிரி திட்டம் மூலம் நிதி ஆதாரத்தை ஈடுசெய்வீர்கள்?

அன்புமணி: மது விற்பனை மூலம், அரசுக்கு ஆண்டுதோறும், 26 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. மணல் கொள்ளையை தடுத்தால் அரசுக்கு, 23 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

கிரானைட், தாது மணல் கொள்ளை, போக்குவரத்து, பொதுப்பணித்துறை ஊழல்களை தடுத்தால், 84 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கூடுதலாகக் கிடைக்கும். அதனால், மது விற்பனையே தேவைப்படாது. மக்களுக்கு தேவை இல்லாத இலவசங்கள் வழங்குவதையும் தவிர்ப்போம்.

மனோஜ்குமார்: தி.மு.க.,- – அ.தி.மு.க., கட்சிகளின் முதல்வர் வேட்பாளர்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

அன்புமணி: கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள், உழைத்தது போதும். மருத்துவர் என்ற அடிப்படையில், இந்த ஆலோசனையை அவர்களுக்கு நான் சொல்கிறேன். இளைஞர்களாகிய நாங்கள், தமிழகத்தை பார்த்துக் கொள்கிறோம். தமிழகத்துக்கு நல்ல திட்டங்களையும், நல்ல ஆட்சியையும் நாங்கள் கொடுப்போம்.

வர்ஷினி: சட்டசபைத் தேர்தலில்,பெண்களுக்கு, எந்த அளவுக்கு நீங்கள் இட ஒதுக்கீடு மற்றும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?

அன்புமணி: தமிழகத்துக்கு, ஒரு பெண் முதல்வராக இருந்தும், இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கடந்த நான்கு ஆண்டுகளில், 8,000 கொலைகள்; 85 ஆயிரம் கொள்ளைகள்; 5,500 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன.

பா.ம.க., ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு, சம உரிமை அல்ல முன்னுரிமை கொடுப்போம். அவர்கள் சுயதொழில் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுப்போம். கிராமப்புற பெண்கள் சுயதொழில் தொடங்க, 80 சதவீத மானியம் வழங்குவோம். தேர்தலில் அதிகளவு பெண் வேட்பாளர்களை நிறுத்துவோம். அதிலும், மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

திலக்: தாய்மொழியான தமிழும், தமிழ் இலக்கியமும் அழிந்துகொண்டு இருக்கின்றன. அதன் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதாவது உங்களிடம் இருக்கிறதா?.

அன்புமணி: ‘தமிழ் மெல்ல சாகும்’ என, அந்தக் காலத்திலேயே சொன்னார்கள். இந்தியாவிலேயே, தாய்மொழி படிக்காமலேயே, பட்டம் பெறுவது, தமிழகத்தில் மட்டும் தான். கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில், அந்த மொழியைப் படித்தால்தான், பட்டம் பெற முடியும்.

Advertisement

கடந்த 50 ஆண்டுகளாக, ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்பது ஏட்டளவில் மட்டும்தான் இருக்கிறது. ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ் வளர்ப்பது எங்களது முக்கியப் பணியாக இருக்கும்.

திவ்யா: அரசியல் தலைவர்களை பற்றி, சமூக வலைதளங்களில் கிண்டலாக சித்தரிக்கப்படுவதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அன்புமணி:
கருத்து சுதந்திரம் என்பது மற்றவர்களை புண்படுத்தாமல் இருக்கவேண்டும். இதை தவறாக பயன்படுத்துவதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும். தலைவர்களும், பொது இடங்களில், அடிப்பது, அறைவது, திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.இது சமூக இணையதள காலம் என்பதால், தலைவர்கள், நிதானத்துடனும், பணிவுடனும், நாகரிகத்துடனும் நடந்துக்கொள்ள வேண்டும்.

பூபதி: இளைஞர்கள் பலருக்கும் அரசியல் பற்றி எதுவும் தெரியாதபோது, அவர்கள்
மத்தியில், உங்கள் கொள்கைகளை எப்படி கொண்டு செல்வீர்கள்?

அன்புமணி:
மாற்றம் வேண்டும் என்றால் அது தானாக நடக்காது. அதில், இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். தமிழகத்தில் பணம் வைத்திருப்பவர்கள் தான் தேர்தலில் வெற்றிப்பெறுகின்றனர்.

பணத்தை வைத்து ஜனநாயகத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். திருமங்கலம், ஸ்ரீரங்கம், ஆர்.கே., நகர் பார்முலா என்கின்றனர். இந்த பார்முலாக்களை மாணவர்கள், தங்களது பாடப் புத்தகத்தில் படித்தது இல்லை. இது, அரசியல்வாதிகள் உருவாக்கியது. இதை ஒழிப்பதற்கு மாணவர்கள் முயற்சிக்க வேண்டும்.

உதயகுமார்: தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கும், உங்களுக்கும் என்ன பிரச்னை?

அன்புமணி: ‘தி.மு.க., ஆட்சியில் என்ன திட்டங்களை செய்தீர்கள்’ என, ஸ்டாலினுக்கு நான், மூன்று கடிதங்களை எழுதி, 20 கேள்விகள் கேட்டேன். ‘இதுகுறித்து பொது மேடையில் விவாதிக்கலாமா’ என்றும் கேட்டேன்.
ஆனால், அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அமெரிக்க அதிபர் தேர்தலை போன்று ஸ்டாலினும், நானும், மற்ற முதல்வர் வேட்பாளர்களும் பொது மேடையில் விவாதம் செய்ய வேண்டும். மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.அதற்கு நான் தயாராக இருக்கிறேன். அப்போது தான், தகுதியான நபரை மக்கள் தேர்வு செய்வர்.

– நமது சிறப்பு நிருபர்-

3 Comments
 • King
  Posted at 22:56h, 12 December Reply

  0

  Dr.Anbumani Sir, I often watching your TV interviews, Social activity & Speeches through live news, facebook or youtube, you are the right person to rule our Tamilnadu in this current situation. Now we youngsters are start following and watching you, We support you always and need more campaign to reach southern parts of Tamilnadu, Elaborate our manifesto to all possible ways and do explain 100 times also than only reach all parts of Tamil people.(If I typed anything wrong means apologies me.)

 • Prakash
  Posted at 17:38h, 26 January Reply

  0

  Hi Sir,
  After winning,our party MLA’s and MP’s has go through routine area or constituency visiting for twice in a six month.Has need to found what are all the problems facing the people.And also they have to inspect the government offices and send report to cm or reporting person. CM also need visit the districts or constituencies at least once in a year.
  Every six month once conduct a meeting with the people and MLA and MP discuss about whether the govt plans and schemes really reach to people or not.

 • Kumaresan vadivel
  Posted at 21:25h, 23 April Reply

  0

  we want u as cm 4 tamizh nadu sir….becoz well educated person only knows the problems and it
  ‘s solutions..u r the only person having solutions for all problems..we support#anbumani4cm

Post A Comment